அஜீத்தை தேடும் புதுமுக இயக்குனர்கள்

webdunia photoWD
கிரீடம் படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் புகுமுக இயக்குனர். இவர் மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

படத்தில் பில்டப் சீன், பஞ்ச் டயலாக் இல்லாமல் மிக எளிமையாக எடுத்திருக்கிறாராம் இயக்குனர். படம் அருமையாக வந்திருக்கிறதாம்.

இந்தப் படம் வெற்றி அடைந்தால் தொடர்ந்து புதுமுக இயக்குனர் படங்களில் நடிப்பேன் என்று அஜீத் சொல்லி இருந்தார். படம் நன்றாக வந்திருப்பதாக யூனிட் ஆட்கள் மூலம் செய்தி பரவ நிறைய புதுமுக இயக்குனர்கள் அஜீத்திற்கு கதை ரெடி செய்து தயாராக வைத்திருக்கிறார்களாம்.

படம் ரிலீஸானது அஜீத்திடம் கதை சொல்லி ஒகே வாங்கும் நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்