கமல் நடிக்கும் தசாவதாரம் முடியும் தறுவாயில் இருக்கிறதாம். இந்தப் படத்திற்கு பின் கமல் உடனடியாக லண்டன் கருணாஸ் தயாரிப்பில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை சரண் இயக்குவதாக இருந்தது.
இடையில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட இப்போது பி.வாசு கமல் படத்தை இயக்கப் போகிறாராம். கதாநாயகியாக நடிக்க ஸ்ரேயாவை கேட்டிருக்கிறார்கள். அம்மணி சம்பளம் 65 லட்சம் என்று சொல்ல அவரை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
இப்போது த்ரிஷா அல்லது நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.