கமலை இயக்கும் சீனிகம் இயக்குனர்

Webdunia
நம்ம ஊர்க்காரர்கள் வேறு மொழிக்கு போய் வந்தால் தான் உள்ளூரில் மரியாதை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான செய்தி இது.

தமிழ்க்காரரான பாலகிருஷ்ணன் இந்திக்குப் போய் அமிதாப்பச்சனை வைத்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் "சீனிகம்" பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் வடக்கில் இயக்குனருக்கு மிகப்பெரிய பேர் கிடைத்திருக்கிறது. அதைப் பார்த்த நம்ம ஊர் ஹீரோக்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு படம் பண்ணலாம் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதில் உலக நாயகன் கமலும் ஒருவர். பாலகிருஷ்ணனும் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். பி.சி.ஸ்ரீராம், இளையராஜா கூட்டணியோடு விரைவில் இந்தப் படத்துக்கான அறிவிப்பு வரக்கூடும்!

வெப்துனியாவைப் படிக்கவும்