இயக்குனருக்கும் கதாநாயகிக்கும் நடந்த மோதல்!

Webdunia
"உயிர்" படத்தை இயக்கிய சாமி அடுத்து இயக்கும் படம் "மிருகம்". தெலுங்கு இயக்குனர் ஒருவரின் வாரிசான ஆதி தான் ஹீரோ. ஹீரோயினாக "தவமாய் தவமிருந்து" பத்மப்ரியா நடிக்கிறார்.

படத்தின் ஹீரோ ஆரம்பக் காட்சிகளில் எக்கச்சக்க எடைபோட்டு... அப்புறம் போகப்போக உடல் மெலிந்து இளைப்பது போல் வருகிறார். அதற்காக கதையை அதே ஆர்டரில் படமாக்கிக் கொண்டிருக்கிறார் சாமி.

இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்தப் படமும் முடிந்துவிடும் என்ற நிலையில் இயக்குனருக்கும் கதாநாயகிக்கும் பிரச்சனை வந்து படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது.

என்ன பிரச்சினை? பாடல் காட்சியின் போது ஆபாசமாக காட்சியமைப்பு இருந்தது என்கிறார் பத்மப்ரியா. இது தொடர்பாக நடந்த மோதலில் பத்மப்ரியா நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் கார்த்திகேயன் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்