வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்திற்கும், கஞ்சா கருப்பு நடிக்கும் அறை எண் 305ல் கடவுள் படத்திற்கும் சரியான போட்டி இருக்கும் போலிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் பிரமாண்டமான செட் போடப்பட்டிருக்கிறது.
இரண்டு படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்திரலோகத்தில் அழகப்பன் வரலாற்று படம் மாதிரியான அமைப்பை கொண்டிருக்கிறது. அறை எண் 305 ல் கடவுள் படம் படத்தின் கதை இன்றைய காலகட்டத்தை குறிப்பதாக இருந்தாலும் கடவுள் மற்றும் பாடல் காட்சிகள் வரலாற்று படத்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.