இப்போதெல்லாம் ஹோம்லியாக நடிக்க ஒன்றிரண்டு கதாநாயகிகள்தான் கிடைக்கிறார்கள். ஆனால் அவர்களும் மாடர்ன் உடை அணிந்து நவநாகரீகமாகவே நடிக்க ஆசைப்படுகிறார்கள். பருத்திவீரன் ப்ரியாமணி கிட்டத்தட்ட ஹோம்லி கதாபாத்திரத்தை வெறுக்கவே செய்கிறார்.
நல்லா மாடர்ன் கேர்ள் கேரக்டர் என்றால் ஆர்வமாக கதை கேட்கிறார். அதேபோல் தூத்துக்குடி கதாநாயகி கார்த்திகா அதற்கு பின் நடித்த பிறப்பு மற்றும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நாளைய பொழுதும் உன்னோடு படத்திலும் தாவணி பாவாடை என்பதால் அம்மணி வெறுத்து போய் அலைகிறார். எப்படியாவது மாடர்ன் உடை அணிந்து நடிப்பதே அவரது லட்சியமாக இருக்கிறதாம்.