கேப்டனுக்கு பதவி உயர்வு

Webdunia
இயக்குனர் மாதேஷ் கேப்டன் விஜயகாந்தின் 150 படத்தை இயக்கப் போவதில் பரபரப்பாக இருக்கிறார். இது மாதேஷின் சொந்த தயாரிப்பு என்பதால் கூடுதல் கவனம் எடுத்து செயல்படுகிறார்.

வழக்கமாக போலீஸ் துறையை சேர்ந்த கதைதான் என்றாலும் இந்த படத்தில் கூடுதலாக புரொமொஷன் கிடைத்திருக்கிறது கேப்டனுக்கு.

இந்த படத்தில் விஜயகாந்த் போலீஸ்களுக்கு டிரெயினிங் கொடுக்கும் அதிகாரியாக வருகிறார்.

இவருக்கு ஜோடியாக "துள்ளல்" படத்தின் கதாநாயகி குர்லின் சோப்ரா நடிக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்