படப்பிடிப்புக்காக காத்திருக்கும் இயக்குனர்

Webdunia
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் "மருதமலை". அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார்.

ஏற்கனவே இவர் "தலைநகரம்" படத்தை இயக்கினார். வழக்கமாக நன்றாக செலவு செய்யும் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு பார்த்து பார்த்து செலவு செய்கிறாராம்.

இன்னும் ஒன்றிரண்டு நாள்கள் தான் படப்பிடிப்பு மீதமிருக்கிறதாம். அதற்கான படப்பிடிப்பை ஏற்பாடு பண்ணாமல் இழுத்தடிக்கிறாராம் தயாரிப்பாளர்.

ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் "வாரணம் ஆயிரம்" படத்திற்கு அதிக செலவு செய்கிறாராம்.

சுராஜ் மிகவும் வருத்தப்பட்டு மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று ரவிச்சந்திரனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்