காமெடி ஹீரோவாக பிரகாஷ்ராஜ்

Webdunia

சனி, 6 செப்டம்பர் 2008 (18:01 IST)
அர்ஜுன் நடித்த சூர்ய பார்வை படத்தை இயக்கியவர் மனோஜ்குமார். இவர் மாதவன், பாவனா நடிக்கும் ஆர்யா படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. ம்னோஜ்குமார் அடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்தின் பெயர் பீஸ்கட்டை ராமசாமி.

நகைச்சுவையை மையமாக கொண்ட இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடிக்கப் போகிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறாராம். மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ஊழியர் அவர் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை காமெடியாக சொல்லப் போகிறாராம் இயக்குனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்