பொம்மரிலு தமிழ் ரீமேக் படத்தை திருட்டு பயலே பட தயாரிப்பாளர் தயாரிக்கிறார். முதல் காப்பி அடிப்படையில் எடிட்டர் மோகன் படத்தை எடுத்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை பார்க்கும் போது தயாரிப்பாளரின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.
படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர். அடுத்து படத்தின் இயக்குனர் ராஜாவுக்கு சம்பளம் 1 கோடியாம். ஜெயம் ரவிக்கு ஒன்றரை கோடி சம்பளமாம். மற்ற நடிகர்கள் சம்பளம் இல்லாமல் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் பட்ஜெட் மூன்றரைக் கோடியை எட்டியிருக்கிறது.
எப்படியும் படத்தின் பட்ஜெட் 7 கோடியை எட்டும் என்ற நிலையில் படத்தில் வேலை செய்யும் மற்ற டெக்னீஷியன்களின் சம்பளத்தை அடிமாட்டு ரேஞ்சுக்கு பேசுகிறார்களாம். இதென்ன கொடுமைடா!