தசாவதாரம் படத்தில் மல்லிகா ஷெராவத் சம்பந்தமான சண்டைக் காட்சிகள் செங்கல்பட்டு அருகில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சண்டை பயிற்சியாளராக கனல் கண்ணன் பணியாற்றிக் கொண்டிருந்தார். கனல் கண்ணன் பயங்கர கோபக்காரர். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் கட்டுபடுத்தச் சொல்லி தன் உதவியாளர்களையும், கூட்டத்தையும் கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார்.
அப்படியெல்லாம் கெட்ட வார்த்தையில் பேசாதீங்க என்று கமல் சொல்ல கனல் கண்ணனுக்கும் கமலுக்கு முட்டிக்கொண்டது. இந்தப் படத்தில் என்னால் வேலை செய்ய முடியாது.
வேறு சண்டை பயிற்ச்சியாளரை போட்டுக் கொள்ளுங்கள் என்று இடத்தை காலிபண்ணிவிட்டார். கனல்கண்ணனின் நீண்டநாள் நண்பரான கே.எஸ்.ரவிக்குமார் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் பேசாமல் இருந்திருக்கிறார்.