இயக்குனர் அமீரும் பாலாவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.
பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர் தனியாக படம் இயக்க வந்தார் இடையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ரொம்ப காலம் பேச்சு வார்த்தையின்றி பிரிந்திருந்தனர்.
இப்போது மீண்டும் நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து படத் தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்க போகிறார்கள்.
அவர்களின் சொந்த தயாரிப்பிலேயே படங்களை இயக்கி வெளியிட இருக்கின்றனர். அதோடு வெளியில் இருக்கும் திறமையான இளம் இயக்குனர்களுக்கும் தங்கள் தயாரிப்பில் வாய்ப்புதர இருக்கிறார்கள்.