சிவாஜி விவகாரம்: ஏவிஎம்- ஷங்கர் இடையே மோதலா?

அலிபாபா கதையாகத்தான் இருக்கிறது 'சிவாஜி' பட ரிலீஸ் தேதி. முதலில் மே 31-ல் ரிலீஸ் என்றார்கள்; அப்புறம் ஜுன் 15 என்கிறார்கள். உண்மையாக படம் எப்போது ரிலீஸாகப் போகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே தெரியாது போலிருக்கிறது.

Webdunia
அதேபோல் படத்தை பற்றிய பரபரப்பான செய்திகளுக்கும் குறைவில்லை. இயக்குனர் ஷங்கரும், ஏவிஎம் நிறுவனமும் முட்டிக் கொண்டதாக சொல்கிறார்கள்.

'வெயில்' திரைப்படத்தின் திரையிடலுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஷங்கர் சென்றிருந்த சமயத்தில், ஏவிஎம் நிறுவனம் 'சிவாஜி' படத்தில் கத்தரி வைத்ததாம்.

படத்தின் நீளம் அதிகம் என்பதால் ஷங்கரை கேட்காமல் படத்தில் சில காட்சிகளை தங்கள் ஆட்களை வைத்து எடிட்டிங் செய்தார்களாம் ஏவிஎம் நிறுவனத்தார்.

இதனால் கொதித்து போன ஷங்கர், 'என்னவேணா செய்யுங்க..' என்று சொல்லி கோபபட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்