அம்மா நடிகைக்கு மவுசு

'பரட்டை என்னும் அழகுசுந்தரம்' படம் தோல்வியை தழுவினாலும் ஒருவருக்கு மட்டும் லாபம். அது, அந்த படத்தில் அம்மாவாக நடித்த அர்ச்சனாவுக்குத் தான்.

Webdunia
கொஞ்ச காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். பணம் சம்பாதிப்பது பற்றி யோசிக்காமல் நல்ல கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்.

அப்படிப்பட்டவரை அம்மாவாக நடிக்க அழைக்க எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருந்தது. 'பரட்டை' படத்தில் அவர் அம்மாவாக நடித்ததும் இப்போது அதே கேரக்டரில் நடிக்க அர்ச்சனாவுக்கு எக்கச்சக்க அழைப்பு வருகிறதாம்.

ஆனால் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் அர்ச்சனா, இப்போது நடிக்க ஒத்துக் கொண்டிருக்கும் படம் தங்கர்பச்சானின் 'ஒன்பது ரூபாய்' படத்தில் மட்டுமே.

வெப்துனியாவைப் படிக்கவும்