ஈகோ பிரச்னையால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்

பாதி படம் முடிந்துவிட்ட நிலையில் 'தாம்தூம்' பட இயக்குனர் ஜீவாவுக்கும், ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகனுக்கும் 'லடாய்' ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது.

வழக்கமாக வெளி இயக்குனர் படங்களில் ரவி நடிக்கும்போது 'நாங்க சொல்ற மாதிரி படத்தை எடுங்க' என்று அவரின் அண்ணன் ராஜா, அப்பா எடிட்டர் மோகன் ஆகியோர் அந்த இயக்குனரை பாடாய் படுத்திவிடுவார்கள்.

Webdunia
அதேபோல் ஜீவா தான் ஒளிப்பதிவு செய்யும் படங்களில் 'இப்படித்தான் படத்தை எடுக்க வேண்டும்' என்று சொல்லி இயக்குனரை ஒரு வழி பண்ணி விடுவார்.

இப்படிபட்ட இரண்டு குரூப் ஒன்று சேர்ந்தால் என்னாகும்? ஈகோ பெரிதாகி பிரச்னை அதிகமாகும்.

'தாம்தூம்' படத்தை பற்றி கவலைப்படாமல் ஜீவா அடுத்த புராஜெக்ட் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஜெயம் ரவியும் 'பொம்மரிலு' படத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

பாவம் இடையில் மாட்டிக்கொண்டது பணத்தை போட்ட தயாரிப்பாளர்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்