பருத்திவீரன் படம் வெற்றிவாகை சூடினாலும் படம் தொடர்பான பிரச்னைகள் இன்னும் முடிந்தபாடில்லை.
ஸ்டூடியோக்ரீன் கே.இ.ஞானவேல் தயாரிக்க இயக்குனர் அமீர் தன்னுடையை டீம் வொர்க் புரொடக்ஷன் சார்பாக பருத்திவீரன் படத்தை ஃபர்ட்ஸ் காப்பி முறையில் இயக்க முதலில் ஒப்புக் கொண்டார்.
Webdunia
படம் பாதியில் இருக்கும் போதே தயாரிப்பாளர் ஞானவேல் பணம் கொடுக்காமல் ஜகா வாங்கிவிட்டார்.
அமீர் கடன் வாங்கி மீதி படத்தை தயாரித்தார். அதற்குபின் அமீரிடம் பணம் இல்லாததால் ஞானவேல் படத்தை கையில் எடுத்துக்கொண்டு வெளியிட்டார். இதில் அமீர் படத்தயாரிப்புக்கு செலவு பண்ணிய ஒன்றரைக்கோடி ரூபாயை செட்டில் செய்வதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்புக்கொண்டார் ஞானவேல்.
ஆனால் படம் வெற்றிகரமாக ஓடி நிறைய லாபம் கிடைத்திருக்கும் வேளையில் அமீருக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அமீர் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட தயாரிப்பாளர் சங்கம் ஞானவேலிடம் விசாரித்திருக்கிறது.
வரும் 28 ம்தேதி சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை செட்டில் பண்ணிவிடுவதாகச் சொல்கிறார்கள். உழைத்த கலைஞனுக்கு பணத்தை கொடுங்கப்பா!