ராஜேஷ் செல்வா என்பவர் இயக்கும் படம் `காலைப்பனி'. படத் தலைப்பே இயற்கை கொஞ்ச இருக்கிறது என்று பார்த்தால் படப்பிடிப்பையும் இயற்கை எழில் கொஞ்சும் குளு குளு கொடைக்கானலில் நடத்தி இருக்கிறார்கள்.
Webdunia
`வட்டாரம்' படத்தில் நடித்த அதிசயா என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜே.ஜே என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அப்பா-மகளின் உறவை ஆழமாகச் சொல்லியிருக்கும் இப்படத்தில் அப்பாவாக நாசர் நடிக்கிறார்.
அப்பா-மகள் சென்டிமென்ட் படம் என்றாலும் காதல், ஆக்ஷன், திரில்லர் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.