மேக்-அப் மேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியாமணி!

சினிமாவில் நடிக்க வந்த காலத்திலிருந்து தனக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை என்பதில் வருத்தமாக இருந்த பிரியாமணிக்கு பருத்திவீரன் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் இருபது நாள் தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட நூறு நாள் வரை கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால் டென்ஷனான பிரியாமணிக்கு அப்போது ஆறுதல் சொன்னவர் படத்தின் மேக் அப் மேன் ஹரி.

இந்தப் படம் உங்களுக்கு மிகப்பெரிய பேர் வாங்கித் தரும்... கவலைப்படாதீங்க என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அப்படி நடந்தால் உங்களுக்கு தங்கத்தில் செயின் வாங்கி போடுகிறேன் என்று சொன்னாராம். அதன் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துவிட்டார் ஹரி.

இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று போன் பண்ணி வரச்சொல்லி கழுத்தில் செயின் போட்டு அழகு பார்த்தாராம் பிரியாமணி. இந்தக் காலத்திலும் இப்படியா என்று சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார் ஹரி.

வெப்துனியாவைப் படிக்கவும்