பல வருடங்களாக பெட்டியில் முடங்கி கிடந்த "குற்றப்பத்திரிகை" படம் இந்த மாதம் 30ம் தேதி ரிலீஸாகப் போகிறது. ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதை என்பதாலேயே சென்ஸாரில் சிக்கி இவ்வளவு நாள் கடந்து வருகிறது.
அதேபோல் ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னால் நடந்ததை வைத்து கன்னடத்தில் ரமேஷ் இயக்கிய "குப்பி" படமும் சில மாற்றங்களோடு தமிழில் இந்த மாதம் ரிலீஸாகப் போகிறது.
இவை தவிர ராஜீவ்காந்தி கொலையை மையமாக வைத்து மூன்றாவதாக ஒரு படம் எடுக்கப்போகிறார்கள் என்பது தான் இப்போதைய ஹைலைட். மோகன்லாலை வைத்து தமிழில் "அரண்", மலையாளத்தில் "கீர்த்தி சக்கரா" படங்களை இயக்கிய மேஜர் ரவிதான் இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.
ஹீரோவாக நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவத்துக்கு பிறகு நடந்தவற்றை வைத்து "சி.பி.ஐ டைரி குறிப்பு" மாதிரி ஒரு ஆக்ஷன் படமாக பண்ணப் போகிறார்கள். மம்மூட்டி தவிர மற்ற கேரக்டர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.