சிம்பு நடிக்கும் "காளை"

சிம்புவை வைத்து யார் யாரோ படம் பண்ணப் போவதாக செய்தி வந்தது. கடைசியாக "திமிரு" படத்தை இயக்கிய தருண்கோபியின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான நண்பராக இருந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு, ஹாரிஸஜெயராஜ் இசை என்று அமர்க்களமான டீமோடு களம் இறங்குகிறார் சிம்பு.

வழக்கம் போலவே கதை, திரைக்கதை என்னோட பெயரில் தான் வரவேண்டும் என்று சிம்பு இயக்குனருக்கு கண்டிஷன் போட.. அதற்கும் தயாராகிவிட்டார் இயக்குனர்.

சினிமான்னா இதுவெல்லாம் சகஜம் தான் என்கிறீர்களா. அதுவும் சரிதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்