ரஜினியும் கமலும் அடிக்கடி பார்த்துக் கொள்ளாவிட்டாலும் பொது இடங்களில் பார்த்துக் கொண்டால் சந்தோசமாக பேசி ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
"சிவாஜி" படத்தில் ஒரு பாடல் காட்சியில் விட்டுப்போன ஒன்றிரண்டு காட்சிகளில் ரஜினி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்தார். இதில் எம்.ஜி.ஆர் வேடமணிந்து பாடல் காட்சியில் நடித்திருக்கிறார் ரஜினி. படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினியிடம் ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்னொரு தளத்தில் "தசாவதாரம்" படப்பிடிப்பில் கமல் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கே சென்று கமலைச் சந்தித்தார் ரஜினி.
படப்பிடிப்பிற்காக போடப்பட்டிருந்த செட்டை பாராட்டிய ரஜினியிடம் கமல் தன் படத்தில் பல கெட்டப்புகளில் நடித்த காட்சிகளின் போட்டோவை காட்டினாராம். இருவரும் கேரவேனில் உட்கார்ந்து அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.