வெரிகோஸ் வெயின். கால் ரத்தக் குழாய்கள் (சிலர் நரம்புகள் என்று தவறாகச் சொல்வார்கள்) சுருண்டு, வீக்கம் அடைந்து, புடைத்து வெளியே தெரியும். தாள முடியாத வலி இருக்கும். கால்கள் வீங்கிக்கொள்ளும். ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
அறிகுறிகள்: தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு). வெரிகோஸ் வெயின் (Varicose vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.