கோலியின் சாதனையை முறியடித்த வீரர் : யார் அந்த ரன் மெஷின் ?

வியாழன், 27 ஜூன் 2019 (16:22 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அற்புதமான கேப்டன் விராட் கோலி. இவர் உலகில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படுகிறார்.இந்நிலையில் அதிவேகத்தில் 3000 ரன்களைக் கடந்த பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முன்னர் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் 24 வயதான  பாபர் ஆசம், நியுஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது அணி வெற்றிபெறக் காரணமாக இருந்தார். இப்போட்டியில் அவர் 101 ரன்கள் எடுத்து தனது 10 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். மட்டுமல்லாமல் இப்போட்டியில் 29 வது ரன்  எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  வெறும் 68 இன்னிங்ஸில் 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் கோலி 75 போட்டிகளில்தான் 3000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஒப்பீடு சரியில்லை என்றாலும் கூட பாகிஸ்தான் அணியாயினுன் திறமையை நாம் மதித்தே ஆக வேண்டும் என்றே பலரும் கூறி வருகின்றனர். மேலும் பாபர் ஆசமுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்