இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஆஜர் அலிகானை தனது 600 ஆவது விக்கெட்டாக வீழ்த்தி சாதனை படைத்தார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.