இந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணி முதன்முறையாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருக்க வேண்டிய சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் வெளியேறியது ஒரு பெரும் குறையாக கருதப்படுகிறது.
அங்க நம்ம டீம் தோக்குது நீங்க இங்க ஜாலியா நவராத்திரி கொண்டாடுறீங்களே.. இது நியாயமா தலைவரே என்ற ரீதியில் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் அவரது கமெண்டில் புலம்பி வந்தாலும், நீங்களாவது சந்தோசமா விழாவை கொண்டாடுங்க என சிலர் வாழ்த்தியும் வருகின்றனர்.