அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் பாகிஸ்தானில் வந்து விளையாடும் பேராசை இருக்கிறது. அவர்கள் மட்டும் இங்கு வந்து விளையாண்டால் தொலைக்காட்சி உரிமம் எல்லாம் கோடிகளில் புரளும். ஆனால் இந்திய அரசுதான், அவர்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கிறது” எனப் பேசியுள்ளார்.