இந்திய அணியில் இப்போது பூம்ரா, ஜடேஜா, ரோஹித் ஷர்மா, தீபக் சஹார் என ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வந்த கே எல் ராகுல் போன்ற வீரர்களும் இன்னும் தங்கள் பழைய பார்முக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் “இந்திய வீரர்கள் காயம் அடைந்து வெளியேறி, பின்னர் தேசிய அகாடமியில் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவர்கள் உள்ளூர் போட்டிகள் சிலவற்றில் விளையாடி திறமையை நிரூபித்த பின்னரே அணிக்குள் இணைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு புதிய விதியை பிசிசிஐ கொண்டு வரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.