ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு… கேப்டன் இவரா?

திங்கள், 17 ஜூலை 2023 (07:57 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதையடுத்து இப்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா,ரிங்கு சிங், ஜிதேஷ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் (விக்கெட் கீப்பர்). 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்