இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 506 ரன்கள் சேர்த்தது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்தனர். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இந்த இன்னிங்ஸில் அவர் 25 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் விளாசினார். ஜெகதீசன் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார்.