தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ரோகித் சர்மா 79 பந்துகளில் 78 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யுவராஜ் சிங் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருபக்கம் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் தவான் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த தோனி ரன் குவிப்பத்தில் கவனமாக இருந்தார். அரை சதம் கடந்த தோனி 52 பந்துகளில் 63 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இதனிடையே தவான் சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 9 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் தோனியுடன் இணைந்து பொறுமையாக ஆடி வந்தார். கடைசி இரண்டு ஓவரில் அதிரடியாக அடித்து ஆடினார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 321 ரன்கள் குவித்தது.