முதல் டி-20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

Sinoj

புதன், 21 பிப்ரவரி 2024 (19:12 IST)
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
 
இதில்,அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா 68 ரன்னும், கான்வே 63 ரன்னும், ஃபின் ஆலன் 32 ரன்னும் அடித்தனர்.
 
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.
 
ஆஸ்திரேலியா அணி சார்பில் மார்ஸ், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
 
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
 
இதில் மிட்செல் 72 ரன்னும், டேவிட் வார்னர் 32 ரன்னும், டிம் டேவிட்  31 ரன்னும் எடுத்தனர். எனவே  20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டும், பெர்குசன் மற்றும் ஆடம் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்