இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக கருதப்படும் நியுசிலாந்து அணியின் டெவன் கான்வே உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக உருவாகி வருகிறார். நியுசிலாந்து அணிக்காக விளையாடும் அவர் ஐபிஎல் மற்றும் உலகம் முழுவதும் உள்ள டி 20 லீக்குகளில் விளையாடி வருகிறார். அவரின் ஃபார்ம் காரணமாக அவர் மிகவும் விரும்பப்படும் வீரராக உள்ளார்.
இந்நிலையில் அவர் இப்போது தேசிய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளாராம். அதற்குக் காரணம் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அவர் தேசிய அணியின் போட்டிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். வாரியம் அழைக்கும்போது எந்த டி 20 லீக்கில் விளையாடிக் கொண்டிருந்தாலும், அதை விட்டுவிட்டு வரவேண்டும்.
லீக் தொடர்களில் சம்பாதிக்கும் பணத்தில் பாதியைக் கூட வீரர்கள் தேசிய அணிக்காக ஒரு ஆண்டு முழுவதும் விளையாடினாலும் பெற முடியாது. அதன் காரணமாக நியுசிலாந்து வீரர்கள் பலர் இதுபோல ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கால்பந்து போல விரைவில் கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகள் குறைந்து, லீக் போட்டிகளே அதிகமாக நடத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.