ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

Senthil Velan

செவ்வாய், 2 ஜூலை 2024 (15:56 IST)
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே செல்ல உள்ளது.  இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 6 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்க இருக்கிறது.

இதில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளின் ப்ளேயிங் XI-ல்  சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை ஆடவர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 

சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் இந்திய அணியுடன் ஹராரேவுக்கு புறப்படுவதற்கு முன்பு இந்தியாவுக்குச் செல்ல இருக்கின்றனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் விளையாட இருக்கிறது. இளம் வீரர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இந்தத் தொடரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் ப்ராக் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் இராஜஸ்தான் ராயல்ஸ் ரியான் பராக் 573 ரன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி விவரம்:
 
ஷுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, கலீல் அகமது, தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (WK), ஹர்ஷித் ராணா.
 
ஜிம்பாப்வே அணி விவரம்:
 
சிகந்தா் ராஸா (கேப்டன்), அக்ரம் ஃபாரஸ், பென்னட் பிரையன், கேம்பெல் ஜோனதன், சதாரா டெண்டாய், ஜாங்வி லூக், காயா இன்னசென்ட், மடாண்டே கிளைவ், மாதெவெரெ வெஸ்லி, மாருமானி டாடிவனாஷி, மசாகட்ஸா வெலிங்டன், மவுடா பிராண்டன், முஸாரபானி பிளெஸ்ஸிங், மையா்ஸ் டியன், நக்வின் அன்டும், கராவா ரிச்சா்டு, ஷும்பா மில்டன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்