இலங்கை பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்: அஸ்வின் கருத்து

வியாழன், 8 மார்ச் 2018 (17:19 IST)
இலங்கையில் நடந்து வரும் மதவாத பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

இலங்கையில் உள்ள கண்டியில் சிங்கள மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டத்தால் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள், கோயில்கள் முதலியவை அடித்து நொறுக்கப்பட்டது.. இதனால் இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் சமூக வளைத்தளங்கள், மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது கலவரத்தை சமாளிக்க ராணுவம் வரபட்டுள்ளது
 
இந்நிலையில், அஷ்வின் இலங்கையில் நடந்து வரும் சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது, இலங்கை மிகவும் அன்பு நிறைந்த நாடு, அங்கு இருக்கும் மக்கள் மிகவும் அன்புடையவர்கள், அங்கு இரு பிரிவினருக்கு நடக்கும் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.வாழ்வோம் மற்றும் வாழவிடுவோம், வேற்றுமைகளை அறிந்து கொண்டு கடந்து செல்வோம், மேலும் இலங்கையில் அமைதியான நிலை திரும்ப வேண்டும் என வேண்டி கொள்வதாக பதிவிட்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்