அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் ஆட்டத்தின் இறுதியில் வெற்றிபெற உள்ள தருவாயில் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் பிரபல மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் வருவது போல தோள்பட்டையை ஆட்டி ஆடினார். அதை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.