ஜூனியர்? சீனியரா? தோனி குறித்து அம்பதி ராயுடு

திங்கள், 17 செப்டம்பர் 2018 (12:09 IST)
இங்கிலாந்து தொடருக்கு அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படததால் பல சர்ச்சைக்குறிய விமர்சனங்கள் முன்வைப்பட்டது. தற்போது இவர் ஆசியக் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், ராயுடு பேட்டி அளித்தது பின்வருமாறு. கோலி இல்லாமல் இந்திய அணி ஆசியக் கோப்பையில் களமிறங்குவது ஒரு வகையில் இழப்புதான். 
 
இருப்பினும் அவர் இல்லாவிட்டாலும், வெற்றி பெறும் அளவுக்கு திறமையைன அணியாகவே இந்திய அணி உள்ளது. தோனி அணியில் இருப்பது மிகப்பெரிய பலம்.
 
ஜூனியர், சீனியர் என்று பார்க்காமல் அனைத்து வீரர்களுடன் பழக்கக்கூடிய வீரராக தோனி உள்ளார். அவரின் வழிகாட்டுதல் அணிக்கு நிச்சயம் துணை புரியும்.
 
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மேம்பட பல்வேறு ஆலோசனைகளை தோனி வழங்கியுள்ளார், அதனால்தான் கடந்த சீசனில் சிறப்பாக விளையாட முடிந்தது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்