கைதான இரண்டு சீனர்கள், பாஸ்போர்ட் காலாவதியான பிறகும் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இருந்துள்ளனர் என்றும் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, அவர்கள் வைத்திருந்த ரூ.2.4கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் ஆன்லைன் லோன் ஆப் பற்றி விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்றும் ஏமாற்றப்பட்டால் உடனே புகார் கொடுக்கவேண்டும் என்றும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். ''கைதான இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு இந்தியர்களிடம் இருந்து 21 லேப்டாப், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்களில் பெரும்பாலும் சீனர்களுக்கு தொடர்பு உள்ளது,''என்றார் அவர்.