ஆண் பெண் ஊதிய முரண்பாடுகள் தவறு-போப் பிரான்சிஸ்

வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:52 IST)
ஒரே பணியை செய்யும் ஆடவர் மற்றும் மகளிர், ஒரே அளவு ஊதியம் பெற வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
 
அவ்வகையில் பணி ஒன்றாக இருக்கும்போது ஊதியங்கள் வித்தியாசமாக இருப்பது, ஒரு பெரிய ஊழல் என்றும் அதை கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும் என்றும், ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆற்றிய ஒரு உரையில் போப் கூறியுள்ளார்.
 
ஆடவருக்கு உரிய அனைத்து உரிமைகளும் மகளிருக்கும் உள்ளன என்று இருக்கும்போது, ஊதிய விஷயத்தில் அவர்களிடையே இடைவெளி இருக்க வேண்டிய காரணம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பெண்களை வெளியே சென்று வேலை பார்க்க வேண்டாம் எனத் தடுக்கும் ஆடவர்களையும் கடுமையாக சாடியுள்ள போப் பிரான்சிஸ், அப்படியானவர்கள் ஒரு வகையான ஆணாதிக்க சிந்தனையில் உள்ளவர்கள் எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்