மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளாக மான் தேஷி மகிளா சககாரி வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்குத் தொடங்கி பணத்தை வைப்பு செய்யலாம். ஆனால், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
இந்த வங்கியில் 1.07 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். அதில் 25 சதவிகிதம் ஆண்கள், 75 சதவிகிதம் பெண்கள். இந்த வங்கியில் கடன் பெற்று பல பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் தொழிலையும் மேம்படுத்தியுள்ளனர். இது 'சேஞ் மேக்கர்ஸ்` என்ற பிபிசி சிறப்புத் தொடரின் இரண்டாவது காணொளி