செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (21:53 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

 
கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் - களத்திர  ஸ்தானத்தில் புதன் - தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தைரிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.   
28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
 
பலன்:
மற்றவர்களை மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போதும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
 
தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.
 
கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
 
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்
 
பெண்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்
 
மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
 
பூரட்டாதி 4 - ம் பாதம்:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய  வற்றால் நல்ல மேன்மை உண்டாகும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக்கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 
 
ரேவதி:
இந்த மாதம் பொன், பொருள் சேரும். மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்கூட அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். 
 
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, மஞ்சள்
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்