செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (21:42 IST)
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

 
கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கும், கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
 
பலன்:
செலவுகளை அதிகமாக சந்திக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும்  மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.
 
தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.
 
குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகும் சூழ்நிலை காணப்படுவதால் வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.
 
அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது அதிகரிக்கும் காலமாக அமையும்
 
பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
மாணவர்கள் கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கை யாக பழகுவது நல்லது
 
உத்திராடம்2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியாது.  
 
திருவோணம்:
இந்த மாதம் பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். 
 
அவிட்டம் 1, 2 பாதங்கள்:
இந்த மாதம் சோதனையான காலமாகும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று ஓங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.    
 
பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, கருநீலம்
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்