செப்டம்பர் மாத ராசிபலன்கள் - சிம்மம்

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:28 IST)
சிம்மம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்மம்: (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் குடும்பாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கும். உங்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். நீதிமனறத்தில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி , வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு.

தொழிலில் முக்கிய பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும் . புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த லாபமும், விற்பனையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடப்பதால் மனதிற்கு திருப்தி ஏற்படும்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்தியோகம் தொடர்பான வேலைகளுக்காக வெளியூர் செல்ல நேரலாம்.  மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

மாணவமணிகளுக்கு நன்மைகள் நடக்கும். சிலர் எதிர்பார்த்த விசயங்கள் கை கூடி வரும்.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பைத் தரலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

மகம்:

இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும்.
பூரம்:

இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

உத்திரம் 1 :

இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில்  மனநிம்மதி உண்டாகலாம்

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி

பரிகாரம்:  சித்தர்கள் சமாதி சென்று வழிபட்டு வரவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்