செப்டம்பர் மாத ராசிபலன்கள் - மிதுனம்

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:20 IST)
மிதுனம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் சுகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மிதுன ராசி அன்பர்களே, அதிக கஷ்டங்கள் இருக்காது. உங்கள் பணிகள் அனைத்தும் மிகவும் சுலபமாக நடந்து முடியும். உங்களுக்காக வேலை செய்து கொடுக்க சிலர் முன்வருவார்கள். அவர்களை வைத்து உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

குடும்பத்தில் வருமானம் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி விசயத்திற்காக அதிகமாக செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் கருத்துக்களைக் கொண்டு குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

தொழில் - வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களிடம் கருத்துக்களைக் கேட்டு உங்கள் வியாபாரத்தை சிறப்பாக மாற்ற முற்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலைப்பளு குறையும். உடன் பணிபுரிவோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு விரும்பிய பணியிடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் மாறும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.

மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தி ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மனதில் இருந்த குழப்பங்களை தீர்த்துக் கொள்வீர்கள்.

அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3, 4

இந்த மாதம் எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும்.

திருவாதிரை 1, 2, 3, 4

இந்த மாதம்  உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும்.

புனர்பூசம் 1, 2, 3

இந்த மாதம் வீட்டிற்குத் தேவையானஅனைத்து வசதிகளும்கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குங்கள்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்