ஹலாசனம்

ஹலாசனத்தை ஒருவர் பயிற்சி செய்ய வேண்டுமென்றால் அவர் விபரீத கரணி, சர்வாங்கசனம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்திருக்வேண்டும். பஷ்ச்சி மோஸ்தாசனத்திற்கு ஹலாசனா ஒரு வகையில் உதவி ஆசனம் என்று கூறலாம். மாறாக புஜங்காசனம், சக்ராசனம், மத்ஸ்யாஸனம் ஆகியவை ஹலாசன நிலைக்கு ஒரு வகையில் எதிர் மாறான நிலையாகும்.

ஹலா, ஆசனம் என்ற இரு வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும் ஹலாசனம் என்பது. "ஹலா" என்றால் கலப்பை என்று பொருள், ஆசனம் என்றால் யோக நிலை. இந்த யோகாசன நிலை மரபான இந்திய விவசாயத்தின் கலப்பை போன்று அமையும் என்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

செய்முறை :

ஹலாசனத்தை சிறந்த முறையில் பயிற்சி செய்ய முதலில் அர்த்த ஹலாஸன நிலையை எடுத்துக் கொள்வது சிறந்தது.

ஆனால் கைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

கைகள் தரையில் அழுந்தி இருந்தாலும் மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.

இரண்டு கால்களை ஒன்று சேர்த்து 90 டிகிரிக்கு உயர்த்தவும்.

உள்ளங்கைகளை பூமியின் மீது அழுத்தி இடுப்பை உயர்த்தி கால்களை பின்புறமாக கொண்டு வரவும்.

WD
சிறிது சிறிதாக முயற்சித்து கால்கட்டை விரல்களை தரையின்மீது வைக்கவும். கால்களை மடிக்காது நீட்டி வைக்கவும்.

உடல் எடை முழுவதையும் தோள்பட்டைகளில் வைத்து கைகளை எடுத்து தலைக்கமேல் கொண்டு வரவும். கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு உச்சந்த தலையை பிடித்து கை முட்டிகளை தரை மீது வைக்கவும்.

சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும்.

கை விரல்களை பிரித்து கையை முதுகுபுறம் கொண்டு வரவும். உள்ளங்கையால் பூமியை அழுத்தி கால் விரல்களை பூமியிலிருந்து பிரித்து கால்களை உயர்த்தவும். மெதுவாக விரிப்பினமீது படுத்து கால்களை தரையை நோக்கி கொண்டு வந்து வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும்.

சவாசனத்திற்கு வந்து ஓய்வு எடுக்கவும்.

பலன்கள் :

முதுகின் பின்புற தசைகள் முதுகெலும்பு முழுவதும் வலிமை பெறுகிறது. ராஜ பிளவை நோய் நிச்சயமாக வராது. இது முதுகெலும்பினமீது வரககூடியது. அவ்விதம் நோய் வந்தவிடின் குணமாவது மிகக் கடினம். குற்றுயிராய் வாவேண்டிய கொடுமைக்கு ஆளாக நேரிடும். இடை சிறுத்தும் நெஞ்சு அகன்றும் அழகிய தோற்றத்தைக் கொடுக்கும்.

இவ்வாசனத்தை சிறியவர்கள் பழகி வந்தால் ஞாபசக்தி அதிகரிக்கும். அதனால் உயர்ந்த நிலையில் மதிப்பெண் எடுத்து முதன்மை பெற்று தேறுவர் என்பது உறுதி.

தைராய்டு, சிறுநீரகம், கல்லீரல், கணையம் (பாங்கிரியாஸ்) ஆகிய உள் உறுப்புகள் புத்துணர்வு பெறுகிறது. மலச்சிக்கல் நீக்கி வாயுக் கோளாறுகளை போக்குகிறது. தந்திர யோகத்தின்படி ஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஆசனமாகும். உடல் எடை குறையும். தொப்பை கரையும். அதிக இரத்த அழுத்தம் சீரடையும். முகத்திற்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால் முகப்பொலிவு ஏற்பட்டு இளமை பாதுகாக்கப்படுகிறது.

நரம்பு தளர்ச்சியைப் போக்குவதில் மிகச் சிறந்த ஆசனமாகும். நீரிழிவு எனும் சர்க்கரை நோய்க்கு அதிக பலனைத் தரும் ஆசனமாகும். வயது ஆக ஆக முதுகெலும்பு வளையும் தன்மை குறைந்து விரைப்பு ஏற்படும். அப்படி ஆகாமல் எவ்வளவுக்கு எவ்வளவு வளையும் தன்மை உடையதாக இருக்கிறதோ அவ்வளவு முதுமை குறைந்து இளமையும், உடல் ஆரோக்கியமும் இருக்கும். இதற்கு இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதமாகும்.

இளைஞர்களுக்கு அதிக பலனைத் தரும் ஆசனம் ஆகும். முதலில் சிறுநீரகத்தையும் விந்துப்பையையும் சீராக இயங்க உறுதுணை புரிகிறது. அதாவது 12 அல்லது 13 வயது அடைந்தவுடன் விந்து முதிர்ச்சி அடைந்து வெளிப்படத்தக்க ஒரு பக்குவ நிலையை அடையும். அப்போது தோன்றும் விரசமான வினோதமான எண்ண அலைகளில் இளமையின் தூண்டுதலுக்கு பலியாகி விந்து சக்தி வெளியாக ஆரம்பிக்கும். அதிக உஷ்ணத்தை உடலில் கிளப்பி விந்துப்பையை தட்டி எழுப்பி வெளிப்படும் படியான நிலையை தூண்டிவிடும், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.


எச்சரிக்கை:

மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஹலாசனத்தை பயிற்சி செய்தல் கூடாது.

இடுப்பைச் சுற்றி வலி இருக்கும்போதும் இந்த ஆசனத்தை தவிர்த்திடுதல் நல்லது.

ஈரல், போன்ற உள்ளுறுப்புகளில் வலி ஏற்பட்டால் ஹலாசனம் செய்வதை உடனே கைவிடவும்.

மேலும், இருதய நோய், உயர் ரத்த அழ்த்த நோய், ஹெர்னியா உள்ளவர்களுக்கு ஹலாசனம் சிறந்ததல்ல.

ஹலாசனத்தை பயிற்சி செய்யும்போது மூச்சுக்காற்றை சீராக உள்ளிழுத்து வெளியேற்றுவது நலம்.

வெப்துனியாவைப் படிக்கவும்