மல்லாக்காகப் படுத்த நிலையில் செய்யும் நவ்காசனத்தை அப்படியே குப்புறப்படுத்தபடி செய்தால் அது விபரீத நவ்காசனம் எனப்படுகிறது.
செய்முறை:
வயிறு மற்றும் மார்பு தரையில் படுமாறு குப்புறப்படுக்கவும்.
நெற்றி தரையைத் தொட வேண்டும்.
கைகளையும், கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகள் பக்கவாட்டில் உடலுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.
பிறகு கைகளை படுத்த நிலையிலேயே முன் புறமாக முழுதும் நீட்டவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கி இருக்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்தபடியே தலை, கைகள், கழுத்து, தோள்பட்டை, உடல், கால்கள் ஆகியவற்றை உயர்த்தவும்.
முழங்கைகள், முழங்கால்களை மடிக்கக்கூடாது. கைகள் காதுகளை உரசியபடி இருக்க வேண்டும்.கால்கள் சேர்ந்தே இருக்க வேண்டும்.இதே படகு நிலையில் மூச்சை சற்றே நிறுத்தி 10 வினாடிகளுக்கு இருக்கவும்.பிறகு மெதுவே மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு திரும்பவும்.பிறகு சவாசன நிலைக்குத் திரும்பி ஓய்வு எடுக்கவும்.பலன்கள்:விபரீத நவ்காசனம் செய்தால் வயிறு, முதுகும் தோள்கள், கழுத்து பகுதிகள் மற்றும் கால்கள் ஆகியவை பலம் பெறும்.தண்டுவட பிரச்சனைகள் நீங்கும்.மார்பு மற்றும் நுரையீரலை விரிவடையச் செய்யும்.