புஜங்கா என்ற வடமொழிச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுப்பது போன்ற நிலையைக் குறிப்பதால் இந்த ஆசனத்திற்கு புஜங்காசனம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
விரிப்பின் மீது குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைக்கவும்.
முகவாய் கட்டையை தரைமீது வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் மார்பின் அருகில் கை முட்டியை உயர்த்திய நிலையில் வைக்கவும்.
உள்ளங்கைகளால் பூமியில் அழுத்தி தொப்புள் வரை தலை உடம்பை உயர்த்தி மேலே பார்க்கவும். அந்த நிலையில் 1 முதல் 20 வரை எண்ணவும் (சாதாரண மூச்சு).
மெதுவாக தரையை நோக்கி இறங்கி முகவாய் கட்டையை விரிப்பின் மீது வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும்.
இது போல் 3 முறை செய்து முடிக்க வேண்டும்.
பலன்கள் :
WD
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை எளிதில் போக்கும் தொடர்ந்து இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும். அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.
முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம் மற்றும் இரத்தத்தில் சளி (ஈஸ்னோபைல்) ஆகியவற்றைப் போக்குகிறது. கிட்னியை பலப்படுத்துகிறது. அது தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.