நவ்காசனம் அல்லது படகு ஆசனம்

படகு போன்ற ஆசன நிலை என்பதால் இது நவ்காசனம் என்று அழைக்கப்படுகிறது. நவ்கா என்றால் படகு. இந்த ஆசனம் சில வித்தியாசங்களைத் தவிர ஊர்த்வ பத -ஹஸ்தாசனத்தை பெரும்பாலும் ஒத்திருக்கும்.

செய்முறை :

1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து மல்லாந்து படுக்கவும்.

2. இரண்டு கால்களையும் பட‌த்‌தி‌லகா‌ண்‌பி‌‌க்க‌ப்படுவதபோ‌ன்றவான‌த்தநோ‌க்‌கி உயர்த்தவும்.

3. அதே சமய‌மதலை, உட‌லம‌ற்று‌மகைகக‌், தோ‌ள்ப‌ட்டைகளை ‌பூ‌மி‌யி‌லஇரு‌ந்து 60 டி‌கி‌ரி‌‌க்கஉய‌ர்‌த்தவு‌ம்.

4. அதே நேரத்தில் உடம்பை பூமியிலிருந்து உயர்த்தி இடுப்பு புட்ட பகுதி மட்டும் தரையின் மீது இருக்கும் படி வைத்து சமநிலை படுத்தவும்.

5. சமநிலைக்கு உடம்பும் கால்களும் வவே‌ண்டு‌ம். இது ஒரு படகு நீரில் மிதக்கும் அமைப்பு போன்று இருக்கும். கைக‌ளமு‌ட்டியை‌ததொவே‌ண்டிஅவ‌சிய‌மி‌‌ல்லை.

WD
6. 15 எண்ணிக்கைகள் அப்படியே சாதாரண மூச்சில் இருந்து விட்டு முதலில் தலையை தரை மீது கொண்டு வந்து படுக்கவும். இதுபோல் இவ்வாசனத்தை 3 தடவைகள் செய்ய வேண்டும்.

பலன்கள் :

வயிற்று தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் கணையம் நன்கு இயங்குகிறது. அதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

நரம்பு தளர்ச்சியை போக்குகிறது. வயிற்றில் தோன்றும் புழுக்களையும், பூச்சிகளையும் எளிதில் மலத்தின் மூலம் வெளியேற்றுகிறது. நுரையீரல் கல்லீரல், கிட்னி, மலக்குடல் ஆகியவற்றின் வேலைகளை துரிதப்படுத்துகிறது.

ஆண், பெண்களின் போக சக்தியை அதிகப்படுத்துகிறது. நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.

உந்திக்கமலம் தொப்புள் மணிப்பூரக சக்கர இடம் பெயராதவாறு காப்பாற்றுவதோடு ஏற்கனவே இடம் பெயர்ந்திருந்தாலும் சரி செய்கிறது.

இளமையை காப்பதில் இவ்வாசனம் பெரும் பங்கு வகிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்