மூச்சு பயிற்சிகளை பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனம், வஜ்ராசனம் போன்ற கால்கள் பூட்டிய நிலையிலேயே செய்ய வேண்டும்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். இடது கையை சின் முத்திரையில் வைத்துக்கொள்ளுங்கள். வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடது பக்கம் இழுத்து இடது பக்கம் வெளிவிடவும். இதனை 10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.