‌பூ‌ர்ண தனுராசன‌ம்

வட மொழியில் தனுஷ் என்றால் வில். பூர்ணம் என்றால் பூர்த்தி அல்லது முழுமை என்று பொருள். எனவே இந்த யோக நிலையில் ஒரு முழு வில்லை போன்று உடலை வளைக்க வேண்டும்.

செய்முறை:

உடல், வயிறு பூமியில் படுமாறு குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த வாரம் பார்த்த அர்த தனுராசன நிலைக்கு வந்த பிறகு கீழு வரும் அசைவுகளை மேற்கொள்ளவும்:

உங்கள் தலை, கழுத்து, தாடை, மார்பு, தொடைகள் மற்றும் முழங்கால்களை ஒரே நேரத்தில் பின்புறமாக வளைக்கவும்.

தாடையை தரையிலிருந்து மேலே எழுப்ப வேண்டும்.

அதே நேரத்தில் அடிவயிறு, கழுத்து, தலை ஆகியவற்றை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.

அதாவது தலை, தோள்பட்டை, மார்பு மற்றும் தொப்புள் பகுதிகள், உங்கள் இடுப்புப்பகுதிகள், தொடைகள், முழங்கால்களுக்கு அடுத்தபடியாக இருக்குமாறு கொண்டு வர வேண்டும்.

WD
பாதங்களையும் முழங்கால்களையும் சேர்க்க வேண்டும்.

மேல் நோக்கிப் பார்க்கவும்.

கணுக்கால்களை பிடித்து வேகமாக இழுக்கவும்.

இப்போது மேலே பார்த்த படி இருக்கவும்.

முதுகெலும்பை முடிந்தவரை வில்போல் வளைக்க வேண்டும்.

இதே நிலையில் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருக்கவும்.

தொடைகள், அடிவயிறு, மார்பு ஆகியவை தரையில் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

இதே நிலையில் ஆடாமல் அசையாமல் இருக்கவும். இதே நிலையில் இருப்பதை மெதுவே அதிகரிக்கவும்.

குறைந்தது 5 வினாடிகளாவது இதே நிலையில் நீடிக்கவும்.

பிறகு மெதுவே பழைய நிலைக்கு திரும்பவும்.

பலன்கள்:

உடல் வலுவை கூட்டுகிறது. அரை வில் போன்ற நிலையில் இருப்பது, கிட்னி, சுரப்பிகள் மற்றும் மறு உற்பத்தி உடல் உறுப்புகளை தூண்டும்.

எச்சரிக்கை: இரண்யா, வயிற்று வலி, அல்சர், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது இந்த யோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம்.

மேலும், சமீபத்தில் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தீர்கள் என்றாலும் இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்