வஜ்ராசனம்!

வஜ்ராசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உடல் பலப்பட்டு உறுதியாகும். சமஸ்கிருதத்தில் ‘வஜ்ர’ என்றால் ‘வைராக்கியமானவன’ என்று பொருள். யோகத்தைப் பயிற்சி செய்பவர் வஜ்ராசனத்தில் இருக்கும் போது அவ்வாறு தெரிவதால் இப்பெயர் வந்தது.

செய்யும் முறை :

சாதாரணமாக நாம் அமரும் சுகாசனத்தில் அமரவும
நிமிர்ந்து நேராக உட்காரவும
இரண்டு கால்களையும் நேராக நீட்டவும
இரண்டு கால்களையும் ஒவ்வொன்றாக மடக்கி, கால் முட்டி தரையில்பட அமரவும
பாதங்கள் மேல் நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டும
இரண்டு பாதங்களும் மேல் நோக்கிய நிலையில், அவைகளுக்கிடையே புட்டங்கள் தரையில் பட அமரவேண்டும

கால்களின் இரண்டு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் இருக்க வேண்டும
கால் முட்டிகள் இரண்டும் எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அருகருகே இருத்தல் வேண்டும
உள்ளங்கையை தொடையில் வைத்திருக்க வேண்டும
பார்வை நேராக இருத்தல் வேண்டும
இந்த ஆசணத்தை செய்து முடிக்கும் வரை மேலுடல் நேராக இருத்தல் வேண்டும

வஜ்ராசனத்தின் மற்றொரு முறையிது :

WD
கால்கள் இரண்டையும் மடக்கி இரு பக்கங்களிலும் பாதங்கள் தெரிய அமர்வதற்கு பதிலாக, அவைகளை அருகருகில் வைத்து அவைகளின் மீது புட்டங்கள் வைத்தும் அமரலாம்.

இரண்டு கால்களின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதிந்துள்ள நிலையில் நேராக அமரவேண்டும்.

பாதங்களின் உட்பகுதியில் புட்டங்கள் தொட்டுக்கொண்ட நிலையில் அமரவேண்டும்.

இவ்விரண்டு நிலைகளிலும் சுவாசம் ஒன்றுபோல்தான் இருக்கும்.


பயன்கள் :

தொடை தொங்கு சதைகள் குறையும்.
முதுகுத் தண்டிற்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
அடி வயிற்று உறுப்புகள் அவைகளுக்குரிய இடத்தில் சரியமைந்திருக்கும்.
முதுகுத் தண்டையொட்டியுள்ள தசைகள் உறுதியாகி பலம் பெறும்.
வயிற்றிற்குக் கீழ் உள்ள பகுதி பலப்படும்.
இறுகியிருக்கும் தசை நாறுகள், பாத எலும்புகள், கணுக் கால்கள், கெண்டைக் கால் தசைகள், தொடை தசைகள், இடுப்பு ஆகியன தளர்ந்திடும்.

எச்சரிக்கை :

உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்